Sunday, December 11, 2011

மீண்டும் அவநிலை....

மீண்டும் அவநிலை....

வழக்கமாக காவிரியால்தான் இது போன்ற அவலநிலை ஏற்படும், இப்பொழுது மிக தந்திரமான திட்டமிடுதலால் அரங்கேறியுள்ளது முல்லைப்பெரியார் நாடகம்... இந்த நாடகம் எவ்வாறு நிறைவேறபோகிறது என்பதை அரசியல் சூழ்ச்சி அறிந்தவர்கள் அனைரும் அறிந்திருப்பர்... எவருக்கு மத்தியில் ஆளுமை இருக்கிறது என்பதை தமிழகத்தின் முன்னால் முதல்வர் அவர்களே பதிவு செய்திருக்கிறார்... சமையல்காரன் தொடங்கி பாதுகாப்பு ஆலோசகர் வரை மலையாளிகளின் அடிவருடித்தனம் சொல்ல தேவையில்லை..

நமது மீனவர் தாக்குதலாகட்டும், கூடங்களும் போராட்டமாகட்டும்... தமிழகத்தை சேர்ந்த எந்த அமைச்சராவது எந்த நடவடிக்கையாவது எடுக்கிறார்களா.. ஆனால் இப்பொழுது பாருங்கள்... வட நாட்டு ஊடகங்கள் எத்தனை முறை இந்த செய்தியை என்னமோ அவன் வீட்டு பிரச்னை மாதிரி தினமும் ஊதுகிறான்... தமிழக மீனவன் சுடப்படும் பொது ... எருமை மாடு மேல மழை பெய்யும் கணக்கா இருக்கும் பாதுகாப்பு அமைச்சர் இப்போ பிரதமரை சந்திக்கிறார்... எதிர்கட்சி தலைவர் பிரதமர சந்திக்க போறார் ... இன்னும் எவன் எவனெல்லாம் என்ன பண்ண போரானோம்....

ஆக தமிழகத்துக்கு எந்த பக்கத்திலிருந்தும் நீர் கிடைக்க போவதில்லை.. ஆக நமக்கிருக்கும் ஒரே வழி நீர் மேலாண்மையில் நாம் தன்னிறைவு அடைவதுதான்.. அரசு இந்த குறிக்கோளுடன் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்... இனி நமக்கு எவரும் உதவியல்ல... நியாமாக கிடைக்க வேண்டிய பங்கை வழங்க போவதில்லை.. அது உச்ச்சநிதிமன்றமாகட்டும் அல்லது மத்திய ஏகாதிபதியமாகட்டும்... வாழ்வோ சாவோ நமக்கு நாமே நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்...

தமிழக அரசு இனியாவது முழுக்க முழுக்க அணைத்து துறைகளுக்கும் அரசியல் சார்பற்ற ஒரு தலைமை நிபுணர் ஆலோசனைக்குழுவை ஏற்படுத்த வேண்டும்.. இந்த குழு முக்கியமாக அறிவியில் கல்வி, தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண்மை, வேளாண்மை ஏற்றுமதி ஆகியவற்றில் நாம் எவரையும் நம்பியிராமல் தன்னிறைவை அடைவதோடு நம்மை இந்த நிலைக்கு, அவநிலைக்கு கொண்டு வந்தவர்கள் முன் வளர்ந்து திமிர வேண்டும் ... என்றானாலும் நாம் இந்த நிலைக்குதான் தள்ளபடபோகிறோம்... இப்பொழுதே அரசு இந்த முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்,

என்றைக்கும் நமக்கு ஆதரவு தரப்போவதில்லை மத்திய ஏகாதிபத்தியம்.. அவர்களோடு கூட்டணி வைதிருப்புவர்களாலும் கூட்ட முடிந்தது பொது குழுகூட்டம் தான்.. அதை தவிர நாம் எதிர்ப்பார்ப்பதற்கும் வேறு எதுவுமில்லை..
சில ஆண்டுகளாக மழையால் காவிரியில் தடங்கல் இல்லாமல் உள்ளது... அது எப்பொழுது முறியும் என்று தெரியவில்லை... இந்த பக்கம் பாலாற்றில் ஆரம்பமாகிவிட்டது புதிய அணைக்கான பணிகள்...

ஆக தமிழக அரசு இருக்கும் நீர் நிலைகளை கொண்டு எவ்வாறு நமக்கு நாமே தன்னிறைவு அடைவது என்ற தொலைநோக்கு ஆராய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.. மிக முக்கியமாக இது அரசியல் சார்பற்ற எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் பனி தடைபெறாவண்ணம் அனைவருக்கும் பொதுவாக ஒரு அரசு நிறுவனமாக தலைமை ஆராய்வு மற்றும் தொழில்நுட்பம் ஆலோசனை குழவாக செயல்பட வேண்டும்,

இதெல்லாம் நடக்குமா!!!!



Saturday, August 21, 2010

தமிழ் மக்கள் அனைவரும் சீக்கியராக மாறுவோம்

தமிழ் மக்கள் அனைவரும் சீக்கியராக மாறுவோம்
ஆம் , அப்போதாவது தமிழர்களை மனிதர்களாகவாது பார்க்கிறார்களா என்று பார்ப்போம்,
மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது மதம் மாற வேண்டும் என்று வெறும் துண்டு பிரசுரம் மட்டுமே எவரோ பரப்பி உள்ளனர் காசுமீரில், உடனே உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் காசுமீர் சென்று முதல்வருடன் கலந்தாலோசிக்கிறார் , நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்படுகின்றன , நிதி அமைச்சர் , உள்துறை அமைச்சர் , பிரதமர் அனைவரும் பாதுகாப்பு உறுதி அளிக்கின்றனர் ,,, இருந்தும் கூட பஞ்சாப் முதல்வர் கடும் எச்சிரிக்கை விடுக்கிறார் ...
ஆம் பஞ்சாபில் அல்ல , காசுமீரில் தன் இன மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க்காவிட்டால் , கடும் விளைவுகள் நேரிடும் என்று பஞ்சாப் முதல்வர் அறிவிக்கிறார் ,
காசுமீர் பிரிவினை வாத தலைவர்களும் , இல்லையில்லை , இது உளவுத்துறையின் சதிவேலைதான் , நாம் எப்போதும் சிறுபான்மையினரை காப்போம் என்று அறிவிக்கிறார்கள் ...

அனால் தமிழ் மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்படுவதோடு நில்லாமல் நுற்றுக்கனக்கானோர் கொல்லப்பட்டும் கூட ... உள்துறை அமைச்சர் தமிழக முதல்வரை சந்தித்தபின் கூறுகிறார் , "இந்த ஆண்டு இந்த ஒரு நிகழ்வு தான் நடந்துள்ளது"....இன்னும் எதனை நிகழ போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று ,,,,,

உலக மகா அதி புத்திசாலி வெளியுறவு அமைச்சர் கிருசன பரமாத்மா கூறுகிறார் , எல்லை தாண்டி சென்றால் நாம் காப்பாற்ற முடியாது என்று .... என்றைகாவது இவர் கட்டு மரம் ஏறி பயணித்தது உண்டா ... எல்லை எங்கிருக்கு என்று கண்டறிய .....

இதுவே தமிழரின் நிலை ... ஆகவே தமிழர் அல்லாமல் வேறு எந்த இனமாக வேண்டுமானாலும் நாம் மாறினால் நமக்கு பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் ... ஆகவே மக்களே, நீங்களே உங்கள் விருப்பபடி ஒரு இனத்தை தேர்வு செய்து உடனடியாக உங்கள் உயிர் உடமையை பாதுகாத்து கொள்ளுங்கள் ....



Wednesday, March 31, 2010

நாங்களே அடிமை தான்

நாங்களே அடிமை தான்

நாங்களே அடிமைகளாகத்தான் உள்ளோம் , ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்,

தந்தை பெரியார் திரு ஈ.வெ.ரா கூறியதாக நான் எங்கோ படித்தது அல்லது இணையத்தில் ஏதோ ஒரு உரையில் கண்டு கேட்டது, யாரிடம் இந்த கூற்று கூறப்பட்டது என்று சரியாக தெரியவில்லை, ஈழத் தந்தை திரு செல்வாவிடமா அல்லது திரு அமிர்தலிங்கத்திடமா என்பதை மீண்டும் ஒருமுறை நான் அறிந்து கொள்ளவேண்டும் , அதற்கு முன் நான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்துவிட்டது ,

யாரிடம் கூறினார் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவருடைய கூற்றுகள் இன்னமும் நிலைபெற்று அழியாமல் நிற்கின்றன…. இன்றும் அடிமைகளாக, தமக்கென ஒரு அரசு இருந்தும் (எண்ணிக்கையில் பார்த்தல் 2 அரசுகள், புதுவையையும் சேர்த்து)


வெளியுறவு கொள்கையிலும் சரி, அண்டை மாநில கொள்கையிலும் சரி, இன்னமும் அடிமைகளாகவே கடத்துகிறோம் காலத்தை,

தந்தை பெரியார் அவர்கள் தேச விடுதலையை ஏன் எதிர்த்தார் என்ற காரணங்களும் இன்றளவில் மிக மிக தெளிவான உண்மையாகவே நம் முன் நிற்கின்றன , தேசம் விடுதலை அடைவதால் தமிழருக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை , அவை அனைத்தும் ஆதிக்க வர்க்கத்தின் கைகளில் அகப்படும் என்ற அவரின் பார்வை , இன்றும் நிதர்சனமாக கோலோச்சி ஆதிக்கம் செலுத்துகிறது ……


எந்த உரிமையும் அதிகாரமும் அற்று, உலகின் பழம்பெரும் இனம் , இறையாண்மை காக்கும் கூட்டத்தோடு கடத்துகிறது காலத்தை,

இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம் நாம் , எமக்கே உரிய தமிழர் இறையாண்மையை தோற்றுவிக்க , எமது மீனவர்களை காக்க, நியாயமான, நேர்மையான நீர் பங்கீட்டு உரிமைகளை மீட்க,

இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்

இன்னும் எத்தனை காலம் காத்திருப்போம்


Saturday, February 20, 2010

தமிழா, போதுமா இவை மட்டும் உனக்கு

தமிழா, போதுமா இவை மட்டும் உனக்கு

அடக்கம், பன்பு, பணிவு, விருந்தோம்பல், வந்தாரை வாழவைத்தல், தமிழா, போதுமா இவை மட்டும் உனக்கு...........
தமிழன் மட்டுமே இன்னும் எத்தனை காலம் தான் இவற்றையெல்லாம் கட்டிக்காப்பது,
நாமென்ன இவற்றீர்கெல்லாம் காப்புரிமையா பெற்றுள்ளோம்,
நம் நாடு, நம் மக்களென, தமிழா உனக்கு மட்டும் ஏன் இந்த சிந்தனை,
கார்கில் நிதியானாலும், பூகம்ப நிதியானாலும், தமிழக பங்களிப்பே அதிகமாம்,
அடடா என்ன ஒரு குணாதிசியம், இருந்து விட்டு போகட்டும்,
தமிழா உனக்கு என்ன நாதி இருந்தது நீ அல்லுரும்போது,
மழை பொய்த்தால், நீ சாலையில் வந்து போராட வேண்டும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், நடுவன்மன்றம், இப்படி ஒவ்வொரு மன்றமாக சென்று வந்தால்,
அடுத்த பருவத்தில் மழை வந்தால்தான் உனக்கு விடிவு, இப்படியே நகர்கிறது நிலை....
இருக்கும் ஒரு நடுவண் குழு படுத்தும் பாடு போதாதென்று இப்போது இன்னுமொரு ஐவர்குழு,
இதே குழு ஐம்பதாகி, ஐம்பது ஆண்டுகளுக்கு பின் நடுவர் குழுவாகி அப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆட்சியாளர்களும், நீதிமான்களும்.......
ஆம் மற்றவர்களுக்கு ஒரு நீதியென்றால், தமிழனுக்கு வேறு நீதி,
அணைத்து உரிமைகளும் இருந்து, ஆதாரங்களும் இருந்தும், வரலாறு இருந்தும், அதை பெற்றுகொள்வதர்க்கு நாம் படும் பாடு,
ஆனால் என்ன ஆனாலும் நாம் இறையாண்மையை மதித்து அடங்கி அடிபணிந்து நடக்க வேண்டும்,
அனைவரிடமும் கனிவாக பழக வேண்டும், அடி வாங்கினாலும் அடித்தவனை உபசரிக்க வேண்டும், அப்போது தான் இறையாண்மை காக்கப்படும்,
ஒக்கேனக்கல் உரிமைகளை வலியுறத்திய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் உச்சநீதிமன்றம்,
முல்லைப்பெரியார் பிரச்சனையில் பலமுறை ஆராய்ந்து முடிவு செய்யப்பட்ட, தமிழகத்தக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளுக்கு மட்டும் ஐவர் குழு எதற்கு?
ஏற்கனவே தமிழகத்தின் நிலை செல்லும் என்ற தீர்ப்பை எதிர்க்கும் சட்டத்தை இயற்றியவர்களுக்கு என்ன தண்டனை?
காவேரி நடுவண் குழுவின் ஆணையை செயற்படுத்தாத அப்போதைய கர்நாடக முதல்வருக்கு கண்டனம் மட்டும் தெரிவித்தால் தமிழகத்து நிலங்கள் விளைந்திடுமா,
இன்னும் கிழக்கில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரச்சினை ஆரம்பமாகவில்லை, பாலாறு, கிருஷ்ணா, என்று அதுவும் காத்திருக்கிறது தமிழன் பண்பை சோதிக்க,

ஆனால் தெலுங்கானா பல்கலைகழகத்தில் துணை இராணுவப்படை இருக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் சொன்னாலும், உச்சநீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக அதை தடை செய்யும், இதே நிலையில் தமிழக அரசாக இருந்தால், ஆம் படை இருக்கக்கூடாது, மாணவர்களின் உரிமைகள் தான் முக்கியம் என்று அரசுக்கு மேலும் ஒரு முறை தமது ஆளுமையை சுட்டிக் காட்டும், தமிழா நீ மத்திய அரசுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் அடிமை தான் என்று......

இவனங்கலாவது சரி 60 ஆண்டா கூடவே இருக்கானுங்க,
சம்மந்தமே இல்லாத சிங்களவனுக்கு எதுக்குயா கச்சதீவ கொடுக்கணும், அவன்கிட்ட தினமும் மீனவர்கள் அடிபட்டு சாகனும், யார கேட்டுயா கொடுத்தீங்க?

தமிழன் என்ன தான் செய்யணும் உரிமையோடு வாழ? வர்றவன் போறவன் எல்லாம் எங்கள கேவலமா பேசறான், இப்பதான் கொஞ்சம் வேகம் வந்திருக்கு தமிழனுக்கு,

உர விலையை ஏற்ற கூடாது என்று முதல்வர் கடிதம் எழுதுகிறார், அடுத்த வாரமே அறிவிக்கபடுகிறது 10௦% விளையேற்றமென்று,
கல்வித்துறையில் மாநில அரசுக்கு இருக்கும் மிகச்சிறிய அதிகாரத்தையும் பிடுங்க திட்டம், இது தான் தமிழனுக்கு என்று இருக்கும் அரசின், அதிகாரத்தின், இறையாண்மையின் உதாரணங்கள்...

சில மாதத்துக்கு முன்னால என்னெனவோ செய்து பார்த்தான் தமிழன், தன் உறவுகளை காக்க, பேரணி போனான், விடாத மழையிலும் சங்கிலியாக நின்னான், உண்ணாவிரதம் இருந்தான், தீக்குளித்தான், எந்த நாயும் எதுவும் கண்டுக்கல,

நேற்று ஒரு பதிவு பார்த்தேன் இணையத்தில், வைகோ பேசுகிறார், ஆயுதம் ஏன் தருகிறீர்கள் என்று கேட்டால், சீன தருகிறது, பாகிஸ்தான் தருகிறது, அதனால் தான் நாங்களும் தருகிறோம் என்று சொல்கிறதாம் கைகூட்டம், தொடர்ந்து வைகோ கேட்கிறார், ஈழத்தில் சீனாக்காரனின், பாகிஸ்தான்காரனின் உறவுக்காரன் இருக்கிறானா, அல்லது இந்தியனான தமிழனின் உறவுக்காரன் இருக்கிறானா,
அன்றைய கால கட்டத்தில் இன்னும் சில அறிவுமான்கள் உலா வந்தன....
வன்னிபோர்களத்தில் எழுபது ஆயிரம் மக்கள் தான் இருக்காங்கனு வங்காளி முக்கர்ஜி சொன்னாரு நாடாளுமன்றத்தில,
போரா, அதெல்லாம் ஒண்ணுமில்ல, எல்லாம் அமைதியா இருக்குனு சொன்னானுங்க 2 மலையாளிங்க,
ஆனா தமிழனான நம்ம அய்யா சிதம்பரம் என்ன சொன்னாருனா... இல்ல நாங்க ஆயுதம் எதுவும் கொடுக்கல, வெறும் ரேடார் மட்டும் தான் கொடுத்தோம்....
அப்படி என்ன தான்யா இருக்கு சிங்களன்கிட்ட, லட்சகணக்கான தமிழர்கள குடியுரிமைய பறித்து அனுப்புனா, தெனமும் மீனவன சுடரான், எத காட்டி தீவ எழுதி வாங்கநானு தெரியல, இன்னும் அவனுக்கு என்ன தான்யா செய்யப் போறீங்க ... கொஞ்ச கொஞ்சமா அப்படியே கன்னியகுமாரி, தூத்துக்குடி, ஒன்னு ஒண்ணா எழுதி கொடுத்துகிட்டே இருங்க, நாங்க அப்படியே பாத்துகிட்டே இருக்கோம்,

தமிழர்களே, அறநெறி, அறம், பன்பு, பாசம், பணிவு, போதும்... இவையெல்லாம் இருந்ததால் தான் நமக்கு இந்த நிலை,

ஆதிக்கங்களின் வரவால் சுவடிள்ளமால் போன வீரம், விவேகத்தை சீர்படுத்தி,
பறிக்கப்பட்ட இறையாண்மையை,
கடல் கடந்து, கண்டம் கடந்து, கோட்டை கட்டி காத்த இறையாண்மையை,
தமிழர் இறையாண்மையை,
இருக்கும் இந்த நிலத்திலாவது மீட்டெடுப்போம்.


Wednesday, July 22, 2009

நான் சற்று அவசரப்பட்டு

ஆங் சான் சூகிக்கு மகாத்மா காந்தி சர்வதேச விருது

இந்த தலைப்பை படித்தவுடன் நான் சற்று அவசரப்பட்டு இந்த விருதை மத்திய அரசுதான் வழங்குகிறதோ என்று எண்ணி விட்டேன்,

முழுமையாக கட்டுரையை படித்த பின்புதான், விருதை வழங்குவது தென் ஆப்பிரிக்காவின் அறக்கட்டளை என்று புரிந்தது,

ஆனாலும் எனக்கு இதில் பெரும் வியப்பு ஏற்படவில்லை, மத்திய அரசு இதே போன்று மேலும் ஒரு விருதை அறிவித்தாலும் வியப்பில்லை,

ஏனென்றால் முடிந்தவரை, போதும் போதும், வேண்டாம் வேண்டாம் என்று கூறும் அளவுக்கு மியான்மார் இராணுவத்துக்கு அணைத்து விதமான உதவிகளையும் செய்து, மறுபுறம் அமைதி விருதையும் வழங்கலாம்,

ஏனென்றால் வல்லரசை நோக்கி நகரும் நாடல்லவா, வல்லரசுகள் செய்யும் நாகரிக நயவஞ்சகம் இது தானே,

பிராந்திய அரசியல் முக்கியத்துவம், வல்லமை, பாதுகாப்பு, இப்படி பல,
தனி மனிதனக்கு எந்த விதத்திலும் பயன்படாத வார்த்தைகள் தான்,
மக்களாட்சியின் அற்புத பயன்பாடுகள்,

மக்களுக்கு என்றுமே நன்மை பயக்காத அற்புத சொற்களஞ்சியம்,

மக்கள் இதை உணரும்வரை ஆட்சியாளர்களின் சொர்க்க களம்.....

ஏதோ முடிந்த வரை நானும் சொற்களை சொல்லி உள்ளேன்!!!!!

வாழ்க மக்களாட்சி.... வாழ்க ஆட்சியாளர்கள்....

Tuesday, May 12, 2009

கொலை செய்வது எப்படி?

கொலை செய்வது எப்படி? இதை படியுங்கள்....

மிகவும் எளிமையான வரைமுறை இது,

கத்தி, துப்பாக்கி, எந்த விதமான ஆயுதமும் தேவையில்லை,

இரத்தமும் இல்லை, வலியும் இல்லை,

கொலைக்கு நிகரான ஓர் நிகழ்வை காண விரும்பும் தமிழக, புதுவை மக்களே,

நாளை மறுநாள் மே 13 அன்று,

கொடுரப் படுகொலையை முன்னின்று அரங்கேற்றும்;

கை கழுவ வேண்டிய கையாலாகாத கைக்கட்சிக்கு,
வாகளிப்பவர்கள் அனைவருமே கொலைக்கு உடந்தையானவர்களே,

ஆகவே கொலை செய்யும் அனுபவம் வேண்டுவோர்கள் கைக்கட்சியுடன் கைக்கோர்க்கலாம்,

அல்லது

வாக்களிக்காதவர்கள்,

கொலை செய்தவர்களிடம் வினவி, விளங்கிக் கொள்ள(ல்ல)லாம்....

Monday, May 4, 2009

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

ஈழ மண்ணில் மீண்டும் ஒரு போர்... உடைமைகளை இழந்து, வீடிழந்து, உயிரையும் இழந்து மானுடம் காணக்கூடாத இன்னலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழரின் துயர நிலை கண்டு மனம் வெதும்பும் புலம்பெயர் ஈழத்தமிழர் போலவே புதுவையிலிருந்து நானும் உங்கள் துயரை பகிர்ந்து கொள்கிறேன்... என்னைப் போலவே இன்னும் பலரும் இதை மட்டுமே செய்ய முடியும் என்பது மறுக்க முடியாத ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்த நிலை...

எனினும் இந்த தருணத்தில், தமிழகத்தில், வழக்கம் போல் எழுந்துள்ள தேர்தல் களியாட்டமும், இந்த ஏமாற்று களியாட்டத்துக்கு இந்த முறை, ஈழம், பிரதான கருவியாக பயன்படுத்தபடுவது பற்றியும், இந்த சூசக களியாட்டத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆதரவு அளிக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளாக இந்த பதிவை நான் இங்கு விவரிக்கிறேன்....

தமிழனுக்கு எதிரி தமிழனே!!

தமிழனுக்கு எதிரி வேற்று கிரகத்திலிருந்தோ, வேற்று நாட்டிலிருந்தோ, வேற்று மாநிலத்தலிருந்தோ வர வேண்டிய அவசியமே இல்லை, அவனுடனேயே இருக்கும் வஞ்சகன் தான் என்று பலரும் உணர்ந்து கூறியுள்ளதை நான் முன்னரே எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன், ஈழத்தமிழர்கள் நீங்களும் எங்களை விட அதிகமாக உணர்ந்துள்ளீர்கள்... எனினும் மீண்டும் அதே தவறை இன்றைய நிலையில் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்....

தமிழக அரசியலையும், குறிப்பாக சொல்வதென்றால் சமீப காலமாக பெருமளவு மாற்றம் கண்டுள்ள இந்திய அரசியலையும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம், அறியாமலும் இருக்கலாம், அந்த பெருமளவு மாற்றம் என்பது வேறொன்றுமல்ல, சமூக பற்றற்ற, நாட்டுப்பற்றற்ற, கொள்கை என்றால் என்ன, அது என்ன விலை, எங்கே கிடைக்கும், என்ற கீழ்த்தரமான மாற்றம் தான்,

வெற்றி பெற, பதவி பெற, ஆட்சி பிடிக்க மக்களின் தொண்டையை கூட பிடித்து முருக்க தயங்காத பீடர்களின் பளிங்கு தோட்டமாக உருமாறியிருப்பது தான் இன்றைய தமிழக தேர்தல் களம். ஆக இந்த களத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், முழக்கமிடுவார்கள், இந்த நச்சுக் கடலில் நீங்களும் விழுந்து, ஏற்கனவே பிளவு பட்டிறிக்கும் தமிழ் சமூகத்தை மேலும் சிதறடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

நான் இங்கு எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ விமர்சிக்க முயலவில்லை, இருந்தாலும் சில நாட்களாக புலம்பெயர் ஈழத்தமிழர்களும் ஏனைய நாட்டின் தமிழ் அமைப்பினரும் பெருவாரியாக அறிவிக்கும் நன்றி மடல்களும், எதிர்மறை பிராச்சாரங்களும் தமிழர்களின் நோக்கத்திலிருந்து பாதை தவருவதாகாவே உள்ளன,

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரின் திடீர் மனமாற்றமும், தேர்தல் வாக்குறுதிகளும், அதனை தொடரும் புலம் பெயர் தமிழர்களின் நன்றி மடல்களும் சற்று வியப்பை அளிக்கத்தான் செய்கிறது, தேர்தல் நேர வாக்குருதிகலாகவாவது அம்மையாருக்கு திடீர் ஞானோதயம் வந்ததே, அதுவரை மகிழ்ச்சியே, இந்த நிலையிலாவது அம்மையார் நிலை மாறியுள்ளார் என்று ஈழத் தமிழர்கள் நீங்கள் நம்புவீர்களேயானால், நாம் அதை தடுக்க விரும்பவில்லை, நீங்கள் நன்றி பாராட்டுவதை குறையென்றும் சொல்லவில்லை, காலம் வழிசெய்தால், தமிழரின் நோக்கம் தமிழீழம் அமைந்தால் யார் என்ன சொன்னால் என்ன...

எனினும் அதற்குமுன் நான் அறிந்த சில செய்திகளை உங்களுடன் இதோ பகிர்ந்து கொள்கிறேன் (எல்லாம் தெரிந்த செய்தி தான்) ,

ஏன் இந்த திடீர் மாற்றம்,

போர்முனையில் மடியும் தமிழனின் ஓலம் கேட்க இத்தனை காலமா?

"அங்கே இருந்தால் புதைமணலில் தான் போவீர்கள், இங்கே எங்களுடன் கூட்டு சேர்ந்தால் ஒளிமயமான எதிர்காலம்" என்று கைக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தபோது தெரியவில்லையா ஈழ நிலை?

'போரென்றால் மக்கள் மடிவது இயல்பு தான்' என்று சொற்பொழிவு நடத்தியபோது தெரியவில்லையா ஈழ நிலை?

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஈழத்துக்காக ஓயாமல் குரல் கொடுக்கும் வைகோவுக்கு ஏற்பட்ட நிலை, அம்மையாரின் அரசியல் பேராசையால், வைகோ எந்த நிலை வரை சென்று, நிர்பந்தத்தால் இன்றைய நிலையில் நீடிப்பதும், சமீபத்தில் ஒரே மேடையில் அவருக்கு அம்மையாரால் அளிக்கப்பட்ட (அவ) மரியாதையையும் ஊடகங்களில் நீங்கள் படித்திருப்பீர்களேயானால் புரியும் அம்மையாரின் ஈழ பாசம்!!

இன்னும் சொல்வதென்றால் தேர்தல் முடிவுக்குப்பின் ஏற்படும் அதிர்ச்சிக்கு நீங்கள் உங்களை திடப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்...

ஆக இருக்கும் எந்த கட்சியும் யோக்கியர்கள் என்றோ, வஞ்சகர்கள் என்றோ நான் கூற விழையவில்லை... இதே ஆளும் கட்சிக்கு தமிழக சட்ட மன்றத்தில் அருதி தனிப்பெரும்பான்மை இருந்திருக்குமேயானால், அந்த கட்சியின் இன்றைய நிலை வேறுபட்டிருக்கும் என்பது எதார்த்தம், அனைவரும் அறிந்தது...

ஆக இருக்கும் அனைவரும் தம் கொள்கைகளை மாற்றி அமைத்துக்கொள்வது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதற்கும், ஆட்சியை கைப்பற்றுவதற்கும் தான்... ஆனால் ஆளும் கட்சியின் அதிகார மட்டத்தில் தான் இந்த எண்ணம் இருக்கிறது என்பதை புலம் பெயர் ஈழத்தமிழர்கள் உணர வேண்டும், உள்ளூர் அரசியல் அறியும் பொது மக்களும், ஏனைய கட்சியின் ஆதரவாளர்களும், தொண்டர்களும் எப்போதும் ஈழ ஆதரவாளர்கள் தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,

நான் முன்னரே குறிப்பிட்டது போல, நீங்கள் ஈழ ஆதரவு தலைவர்களுக்கு நன்றி பாராட்டுவது பிழையல்ல, ஆனால் சிலரை போற்றுவதும், சிலரை தூற்றுவதும் இருக்கும் பிரிவினையை மேலும் அதிகரிக்கும் என்பது எனது கருத்து, அது தமிழரின் நோக்கத்தை திசை திருப்பும் செயலாகவே அமையும்....

ஈழ போராளிகள் களத்தில் போராடுகிறார்கள், அவர்கள் தமிழக அரசியலை விமர்சிப்பதில்லை,

நாமும் இந்த அரசியல் களத்தை ஒதுக்கிவிட்டு, எப்போதும் போல் நோக்கம் சிதையாமால், வழி பிறழாமல், தம்மால் இயன்ற பங்களிப்பை அளித்து இறுதி இலக்கிற்கு வலிமை சேர்ப்போம்.....